அமமுக படுதோல்வி ஏன்? SDPI கட்சியை இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை.. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு வாக்குகள் ஏன் கிடைக்கவில்லை

 மக்கள்செய்திமையத்தின் கருத்துக் கணிப்பில் டி.டி.வி தினகரன் தலைமையிலான  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் திருச்சி, தேனி, சிவகங்கை, இராமநாதபுரம், தஞ்சை ஆகிய மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி வருகிறார் என்பதையும் குறிப்பிட்டு இருந்தோம். ஆனால் ஐந்து மக்களவைத் தொகுதிகளிலும் அமமுக ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒரு இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. இராமநாதபுரத்தில் அமமுக வேட்பாளர் 1,38,398 வாக்குகள் பெற்றுள்ளார். தேனியில் தங்க தமிழ்செல்வன் 1,41,951 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஆனால் மத்திய சென்னை தொகுதியில் அமமுக கூட்டணியின் SDPI வேட்பாளர் தெகலான் பாகவி 23,729 வாக்குகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார். மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் SDPI வேட்பாளரை அதிக வாக்குகள் பெற்றுள்ளார்கள்.

 மத்தியசென்னை மக்களவைத் தொகுதியில் 2014ல் நடந்த தேர்தலில் அதிமுக கூட்டணி –வேட்பாளர் எஸ்.ஆர். விஜயகுமார் 3,33,296 வாக்குகளை பெற்றது. தேமுதிக வேட்பாளர் ரவீந்திரன் – 1,14,798 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 2,87,455 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் வெற்றி பெற்றார்..

 அதிமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக, பாமக இருந்தும் தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் பாமக வை சேர்ந்த சாம்பால் 1,47,140 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.2014ல் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ரவீந்திரன் பெற்ற வாக்குகள் 1,14,798. இதை பார்க்கும் போது மத்திய சென்னையில் அதிமுக கட்சி அழிந்துவிட்டது என்பது உறுதியாக தெரிகிறது.

  ஆனால் தற்போது திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 4,48,341 வாக்குகளை பெற்றும் வெற்றி பெற்றுள்ளார். நம் கருத்துக்கணிப்பில் மத்திய சென்னை தொகுதியில் உருது பேசும் இஸ்லாமியர்கள் திமுகவுக்கு வாக்கு அளித்துள்ளார்கள் என்பதை தெளிவாக குறிப்பிட்டு உள்ளோம்.

அமமுக கூட்டணியில் உள்ள இஸ்லாமிய கட்சியான SDBI கட்சிக்கு, இஸ்லாமியர்கள் வாக்களிக்க முன் வரவில்லை என்பது தெளிவாகியுள்ளது.  அமமுக கட்சி SDPI கட்சி கூட்டணியில் இருப்பதால், தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் வாக்குகள் கிடைக்கும் என நம்பிக்கையில் இருந்தது.  இதைதான் மக்கள்செய்திமையம் கருத்துக் கணிப்பில் அமமுகவுக்கு இஸ்லாமியர் வாக்குகள் கிடைக்கும் என்று கணக்கிட்டது.

அரவக்குறிச்சியில், அமமுக SDPI கட்சி கூட்டணி இருப்பதால், இஸ்லாமியர் வாக்கு கிடைக்கும் என்பதால் பள்ளப்பட்டியை சேர்ந்த சாகுல் அமீதை வேட்பாளராக நிறுத்தியது..

அமமுகவுடன்  SDPI கட்சி கூட்டணி இருந்து, அமமுக வேட்பாளர்களுக்கு இஸ்லாமியர் சமூகத்தினர் வாக்களிக்கவில்லை என்பதுதான் உண்மை.

 அமமுகவை கள்ளர், முக்குலத்தோர் சாதி அடங்கிய கட்சியாக மட்டுமே தென் மாவட்டங்களில் மக்கள் நினைத்தார்கள். அதனால் அமமுகவுக்கு மற்ற சாதி மக்கள் வாக்களிக்கவில்லை. தென் மாவட்டங்களில் அமமுகவுக்கு பெருபான்மையான சாதியான யாதவ், தலித் மற்றும் இந்து, கிறிஸ்துவ நாடார்கள், சைவ பிள்ளை, அசைவ பிள்ளை, செட்டியார்  உள்ளிட்ட பல சாதி மக்கள் வாக்களிக்கவில்லை.

 அதனாம் டி.டி.வி தினகரன், கட்சியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது, அதிமுக அடிமட்ட தொண்டனின் வேண்டுகோள்…                                  தொடரும்….

Comments

comments