அப்பா மு.க.முத்துவை கேவலப்படுத்திய…கோட்டூர்புரம் ஆய்வாளர் விஜயலட்சுமி..மகள்  ஷிபாராணி பேட்டி..          

 நான் உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை எனது தந்தை மு.க.முத்து அவர்களை  பார்க்க அனுமதிக்க வேண்டும் என மனு செய்துள்ளேன் என்று திமுக தலைவர் கருணாநிதியின் முதல் மனைவி மகன் மு.க.முத்துவின் மகள் ஷிபாராணி நம்மிடம் கண் கலங்கியபடி பேசினார்.

  ஆட் கொணர்வு மனுவின் முதல் விசாரணையில்… 5 வது கோர்ட் வளாகம் மாண்புமிகு நீதியரசர்கள், காவல் ஆணையர் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மனுதாரரை விசாரணை செய்யும்படி 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். அதன்படி IS ஆய்வாளர் *திரு.விஜயன்* அவர்கள் விசாரணை மேற்கொண்டார். 

  பின்னர் சம்பந்தப்பட்ட கோட்டூர்புரம் J4 காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் *பொன்திலக்* மற்றும் காவலர் ஒருவரும் தேதி குறிப்பிடாமல், சம்மன்னை நான் இல்லாத நேரத்தில் வீட்டில் கொடுத்துள்ளார். பின்பு நான் வந்தவுடன் கோட்டூர்புரம் J4 காவல் நிலைய ஆய்வாளர் *விஜயலட்சுமி அவர்களிடம் விசாரணைக்காக சென்றேன்… அப்போது ஆய்வாளர் விஜயலட்சுமி நீ மு.க.முத்துவிற்குத்தான் பிறந்தாயா…? உன்னுடைய அம்மா யார்..? மு.க.முத்துவிற்கு திருமணம் நடந்ததா..? என்று கேவலமாக கேட்டார்.  பின்பு என்னை பேசவைத்து வீடியோ பதிவு எடுத்துக்கொண்டார். பிறகு ஏன் கோர்ட்டுக்கு சென்றாய். நானே போலீஸ் உதவியுடன் பாலவாக்கத்தில் உள்ள உன் தந்தையை பார்க்க அழைத்துச்செல்கிறேன். கோர்ட்டுக்கு போகாதே என்று வீடியோவை அணைத்துவிட்டு பேசினார். மீண்டும்  கோர்ட்டு முடிந்து வரும் பொழுது  *“பார்த்தாயா… என்ன மீறி எதுவும் செய்ய முடியாது” நான் நினைத்தேன் உன் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து, சிறையில் அடைத்துவிடுவேன்..புரியதா..இனி மு.க.முத்துவை பார்க்க வேண்டும் என்று வழக்கு போட்டே… என்று  மிரட்டினார்…

  கோட்டூர்புரம் காவல் நிலையம் ஆய்வாளர் விஜயலட்சுமி பெண்ணாக இருந்தும், இன்னொரு பெண் மீது மனிதாபிமானமே இல்லாமல் நடந்துக் கொண்டார் என்றார் ஷிபாராணி…

 

Comments

comments