அதிரடி தீர்ப்பு..!!

மாநில ஆளுனர்கள் எந்த நீதி மன்றத்திற்கும் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை

– கொல்கத்தா உயர்நீதி மன்றம் தீர்ப்பு

மேற்கு வங்க ஆளுனர் ஜக்தீப் தங்கர் பாஜக பாஜக வின் ‘ஊதுகுழல்’ ( mouthpiece ) போல செயல்படுகிறார் எனவும் அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமென்று கூறி கொல்கத்தா உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை PIL) தலைமை நீதிபதி பிரகாஷ் ஶ்ரீவாஸ்தவா அவர்கள் மற்றும் நீதிபதி ராஜரிஷி பரத்வாஜ் அவர்கள் ஆகிய இருவர் கொண்ட பெஞ்ச் தள்ளுபடி செய்தது.

வழக்கை இன்று விசாரணை ( 18/2/2022, 10.44 AM) விசாரணை செய்த நீதபதிகள் , அரசியலமைப்பு சட்டம்
361 ன் படி ஓரு மாநில ஆளுனர் அவர் ஆற்றும் பணிகள், அதிகாரங்களைப் பொறுத்த வரை அவர் எந்த நீதிமன்றத்திடமும் அவர் ஆற்றும் கடமைகளைப் பற்றி பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை எனவும், மேலும் அரசியலமைப்பு சட்டம் 156 பிரிவின் கீழ் அவரை நியமித்த குடியரசுத் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்தி்ரமாக உள்ள வரை அவர் முழு பதவிக்காலத்திலும் (5 வருடம்) பதவியில் தொடர்ந்து பணியாற்ற தடையில்லை எனவும் கூறியுள்ளது. ஓரு மாநில ஆளுனர் தனிப்பட்ட முறையில் குற்றம் இழைத்துள்ளார் என நிருபிக்கப்பட்டாலொழிய அவருக்கு நடவடிக்கைகளிலிருந்து முழு பாதுகாப்பும் உள்ளது.

வழக்கை தொடர்ந்தவர் ஒரு பிரபல வழக்கறிஞர் ராம்பிரசாத் சர்க்கார் ஆகும்.. வருங்காலங்களில் தனக்கு ஏதாவது பிரயோஜனமாக இருக்கட்டுமே என கேரளா, மற்றும் தமிழக ஆளுனர்களையும் selective ஆக கோர்த்து விட்டிருந்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா! இதுபோன்று வழக்குகளை விஜாரணை செய்வதை தவிர்த்தல் நல்லது என கூறி மனுதாரருக்கு அபராதம் விதிக்க வேண்டுமென கோரியதை நீதிபதிகள் ஏற்க வில்லை.

Comments

comments

About admin

Check Also

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் …

Leave a Reply

Your email address will not be published.