அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் பின்னணியில் மக்கள்செய்திமையம்…

தமிழகத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை தோல்வியடைய செய்ய வேண்டும் என்பதற்காக மக்கள்செய்திமையம் அதிமுக அரசின் ஊழல்களை  மினி புத்தகமாக அச்சிட்டு 25மக்களவைத் தொகுதிகளில் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சென்றது.

     அதிமுக முன்னாள் அமைச்சரும், ஒ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.  ஜெ.வை ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் கே.பி.முன்சாமியின் ஊழல்கள் 8பக்கத்தில் மினி புத்தகமாக 50,000 அச்சிட்டு, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள கிராமங்கள், நகரங்களில் மக்களிடம் கொண்டு சென்றோம்..

 அதே போல் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் ரூ 2.12 கோடி கடன் கதை – எஸ்.பி.ஐ ஊழல் – கயர் போர்டு ஊழல் என்று நான்கு பக்கத்தில் மினி புத்தகமாக 50,000 அச்சிட்டு கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மக்களிடம் கொண்டு சென்றோம்..

 அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி, பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இருவர் தோல்வியில் மக்கள்செய்திமையத்திற்கு முக்கிய பங்கு உண்டு..

 அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் தொடர்புக்கொண்டு அதிமுக அரசின் ஊழல் புத்தகங்களை கேட்டார். தமிழக அரசின் முட்டை ஊழல்..கிறிஸ்டி புட்ஸின் முட்டை அரசாங்கம் மற்றும் இலவச மின்சாரம் ரூ15,000கோடி ஊழல் ஆகிய இரண்டு புத்தகங்களில் தலா 10,000 புத்தகங்களை அரவக்குறிச்சி முழுவதும் மக்களிடம் கொடுத்தோம்..

 இப்படி அதிமுக அரசின் ஊழல்களை புத்தகமாகவும், மினி புத்தகமாக அச்சிட்டு  39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள மக்களிடம் மக்கள்செய்திமையம் கொண்டு சென்றதால், அதிமுக கூட்டணி வேட்பாளர் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது..

  அதிமுக கூட்டணி வேட்பாளர்களின் தோல்வியின் மக்கள்செய்திமையம் பின்னணியில் இருந்ததால், வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர் மக்கள்செய்திமையத்தின் ஆசிரியருக்கு செல்போன் மூலம் வாழ்த்துக்களையும், நன்றியையும் பகிர்ந்துக்கொண்டார்கள்..

  மக்கள்செய்திமையம் ஆசிரியர் மீது எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், குண்டர் சட்டத்தில் அடைத்தாலும், துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்ய முயற்சி நடந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்ட களத்தில் துணிவோடு , அச்சம் இல்லாமல் பீடு நடைபோடும்..

Comments

comments