தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ்யின் செயல்பாடுகளை பார்க்கும் போது அதிமுக – பா.ஜ.ககூட்டணியில் இணைந்துவிட்டரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் 24.9.14 முதல் பணியில் உள்ளார். 12600 கிராம பஞ்சாய்த்துக்கள் மற்றும் மக்களுடன் தொடர்புடைய பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் 54 மாதங்களாக பணியாற்றுகிறார்,அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று 25.2.19ல் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யா பிரதாசாகு ஐ.ஏ.எஸ் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 30 நாட்களாகியும் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்யை மாற்றப்படவில்லை..
நகராட்சி நிர்வாக ஆணையராக இருந்த பிரகாஷ் ஐ.ஏ.எஸ் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் நடவடிக்கை எடுக்கும்படி பொதுத்துறை செயலாளருக்கு 16.11.2018ல் கடிதம் அனுப்பி உள்ளது.
மக்கள்செய்திமையம் 7.11.18ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு, பிரகாஷ் ஐ.ஏ.எஸ்க்கு அனுப்பிய ஊழல் புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்க, 16.11.18ல்(Petn.no.11150/2018/PUB/CC-HQ dated 16.11.18) தலைமைச் செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளரும், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநகம் முதல் கட்ட விசாரணையை முடித்துவிட்டது. ஊழலுக்கு ஆதாரம் இருக்கிறது என்பதால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் நிலையில் உள்ளது.
ஊழல் விசாரணையில் சிக்கிய பிரகாஷ் ஐ.ஏ.எஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டு வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று மக்களவை தொகுதிக்கும் தேர்தல் அதிகாரியாக பணியாற்றுகிறார்..எப்படி..
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியும், இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றப்படவில்லை..
தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யா பிரதாசாகு ஐ.ஏ.எஸ்யின் ஆளும் கட்சியின் ஆதரவான செயல்பாடுகளை பார்க்கும் போது, அதிமுக –பாஜக கூட்டணியில் தேர்தல் ஆணையர் சத்யா பிரதாசாகு ஐ.ஏ.எஸ்யும் இணைந்துவிட்டரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மக்கள்செய்திமையம், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு விரிவாக, ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பி உள்ளது..