அதிமுக அரசு கவிழ்ந்தது… ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக மக்கள்.. திமுக கூட்டணி அமோக வெற்றி.. அதிமுக ஆட்சியில் ஒரு இலட்சம் கோடி ஊழல்..

மக்களவைத் தேர்தல் முடிவுகள், 22 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போதும்,  ஊழல் அதிமுக ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் வாக்களித்துள்ளார்கள்.. அடுத்த சில நாட்களில் அதிமுக அரசு கவிழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி வாக்கு எண்ணிக்கையில் அமோக வெற்றி பெற்று வருகிறது..

 எடப்பாடி பழனிச்சாமி, ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவுக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை. டி.டி.வி தினகரன் தலைமையிலான அம்மா முன்னேற்றக் கழகத்துக்கு தான் அதிமுக அடிமட்டத் தொண்டனின் ஆதரவு என்பதை வாக்கு எண்ணிக்கையில் உறுதியாகி உள்ளது.

  எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் ஒரு இலட்சம் கோடி ஊழல், தொடர்பாக ஆதாரங்கள், ஆவணங்களுடன் மக்கள்செய்திமையம் ஆளுநரிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளது.. ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திடம் மக்கள்செய்திமையம் அதிமுக அரசின் ரூ30,000 கோடி ஊழல் தொடர்பாக 20க்கு மேற்பட்ட புகார்களை ஆதாரங்களுடன் கொடுத்துள்ளது..

 எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் ஊழலுக்கு துணை போன அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்கள்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஊழல் அதிகாரிகளுக்கு காப்பாற்ற முயற்சி செய்யக் கூடாது என்பது வெற்றி பெறவைத்த மக்களின் விருப்பம்…

Comments

comments