அதிமுக அரசுக்கு எதிராக ஜாங்கிட் ஐ.பி.எஸ்.. 30ஐ.பி.எஸ் அதிகாரிகள் டம்மி பதவியில்… டி.ஜி.பிக்கு ஜாங்கிட் கடிதம்

சிவல் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் எந்தவித முக்கியதுவம் இல்லாத பதவிகளில் உள்ளார்கள் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றும் டிஜிபி, காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஐ.பி.எஸ் அல்லாத சுமார் 30 அதிகாரிகள் முக்கியதுவம் வாய்ந்த பதவிகளில் பணியற்றி கொண்டிருக்கிறார்கள். நேரடியாக தேர்வு எழுதி ஐ.பி.எஸ் ஆக பணியாற்றிக்கொண்டு இருப்பவர்களுக்கு பாதிக்கக் கூடிய செயலாகும் என்று டி.ஜி.பிக்கு எழுதிய கடித்தில் கூறியுள்ளார்.

மேலும் டம்மி பதவிகளில் இருக்கும் 30 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பட்டியலையும் இணைத்துள்ளார்.

2006-11 திமுக ஆட்சியில் சென்னை புறநகருக்கு என்று ஆணையர் பதவி ஏற்படுத்தப்பட்டு, ஜாங்கிட் ஐ.பி.எஸ் புறநகர் பகுதி ஆணையராக நியமிக்கப்பட்டார். ஜாங்கிட் புற நகர் பகுதி ஆணையராக இருக்கும் போது, திமுக தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கு பல பிரச்சனைக்குரிய நிலங்களை மிரட்டி வாங்கி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கருணாநிதி குடும்பத்தினர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ்க்கு ஜாங்கிட் ஐ.பி.எஸ் நெருக்கமானவர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவராக நிரஞ்சன் மார்டி இருந்த போது, ஜாங்கிட் திருநெல்வேலி மாநகர ஆணையராக பணியாற்றினார். அதனால் கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

மக்களவைத் தேர்தல் முடிந்து, இடைத்தேர்தலும் முடிந்து உள்ள நிலையில் மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடைபெற வாய்ப்பு இருப்பதால், டி.ஜி.பி ஜாங்கிட் அதிமுக அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மே 23ம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பு இருப்பதால், ஜாங்கிட் ஐ.பி.எஸ் அதிகாரமுள்ள பதவியில் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Comments

comments