அதிமுக அரசின் 8ஆண்டுகள் சாதனை.. நகராட்சிகளில் குடி நீர் பஞ்சம்… டூ பாத் போன கால் கழுவக் கூட தண்ணீர் இல்லை- NO DRINKING WATER-PUBLIC HIGHLY AFFECTED

தமிழகம் முழுவதும் குடி நீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தினமும் மக்கள் குடி நிருக்காக சாலை மறியல் செய்கிறார்கள்.. மழை நீரை தேக்கி வைக்க திட்டம் எதுவும் 8ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏரி, குளம், கண்வாய்களை ஆழப்படுத்தியதாக, பராமரிப்பு செய்ததாக நகராட்சிகளில் போலி பில் போட்டு சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..

 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் குடி நீர் அவல நிலை பாருங்கள்… தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையரகம் கொடுத்த குடி நீர் நிலவரம் 31.5.19..

 1. செங்கல்பட்டு நகராட்சி – 5நாட்களுக்கு ஒரு முறை
 2. காஞ்சிபுரம் நகராட்சி – ஒரு நாள்விட்டு ஒருநாள்
 3. பல்லவபுரம் நகராட்சி – மூன்று நாட்களுக்கு ஒரு முறை,
 4. அனகாபுத்தூர் நகராட்சி – ஏழு நாட்களுக்கு ஒரு முறை
 5. பம்மல் நகராட்சி  – ஏழு நாட்களுக்கு ஒரு முறை
 6. ஆவடி நகராட்சி  – இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ( உண்மையில் நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் குடி நீர் கிடைக்கிறது)
 7. பூந்தமல்லி நகராட்சி – தினமும்( உண்மையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை)
 8. திருத்தணி நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒருமுறை(உண்மையில் நான்கு நாட்களுக்கு ஒருமுறை)
 9. திருவேற்காடு  நகராட்சி – தினமும்(உண்மையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை)
 10. மறைமலைநகர் நகராட்சி – தினமும்( உண்மையில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை)
 11. திருவள்ளூர் நகராட்சி – தினமும்( உண்மையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை)

இப்படி நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்கு நகராட்சிகளின் ஆணையர்கள் குடி நீர் பஞ்சம் என்றால், தம்மை மாற்றிவிடுவார்களோ என்று  தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளார்கள்..

 உண்மையில் குடி நீர் பஞ்சாத்தால், வாக்களித்த மக்கள் பிளாஸ்டிக் காலி குடங்களை வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் குடி நீர் லாரி வருமா என்று பல மணி நேரம் காத்துக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகிறது. ஆனால் அதிகாரமையத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் குடி நீர் பஞ்சத்தை பற்றி கவலைபடவே இல்லை.                                                                                               தொடரும்…..

Comments

comments

About admin

Check Also

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்.

மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது பிறந்தநாளையொட்டி சென்னை, வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் …

Leave a Reply

Your email address will not be published.