
தமிழகம் முழுவதும் குடி நீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தினமும் மக்கள் குடி நிருக்காக சாலை மறியல் செய்கிறார்கள்.. மழை நீரை தேக்கி வைக்க திட்டம் எதுவும் 8ஆண்டுகளில் செயல்படுத்தவில்லை. ஏரி, குளம், கண்வாய்களை ஆழப்படுத்தியதாக, பராமரிப்பு செய்ததாக நகராட்சிகளில் போலி பில் போட்டு சுருட்டிக்கொண்டு இருக்கிறார்கள்..
2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நகராட்சிகளில் குடி நீர் அவல நிலை பாருங்கள்… தமிழக அரசுக்கு நகராட்சி நிர்வாக ஆணையரகம் கொடுத்த குடி நீர் நிலவரம் 31.5.19..
- ஆம்பூர் நகராட்சி – ஒரு நாள் விட்டு ஒரு நாள்
- அரக்கோணம் நகராட்சி – இரண்டு நாளைக்கு ஒரு முறை(உண்மையில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை)
- குடியாத்தம் நகராட்சி – ஒரு நாள் விட்டு ஒரு நாள்( உண்மையில்இரண்டு நாளைக்கு ஒரு முறை)
- ராணிப்பேட்டை நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
- வாலாஜாபேட்டை நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
- திருப்பத்தூர் நகராட்சி – ஒரு நாள் விட்டு ஒரு நாள்
- வாணியம்பாடி நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
- ஜோலார்பேட்டை நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
- மேல்விஷாரம் நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
- பேராணம்பட்டு நகராட்சி – மூன்று நாட்களுக்கு ஒரு முறை
திருவண்ணாமலை மாவட்டம்..
- திருவண்ணாமலை நகராட்சி – தினசரி(உண்மையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்)
- ஆரணி நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
- திருவத்திபுரம் நகராட்சி – இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
- வந்தவாசி நகராட்சி – மூன்று நாட்களுக்கு ஒரு முறை
விழுப்புரம் மாவட்டம்
- விழுப்புரம் நகராட்சி – தினசரி(உண்மையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள்)
- திண்டிவனம் நகராட்சி – மூன்று நாட்களுக்கு ஒரு முறை
- கள்ளக்குறிச்சி நகராட்சி – தினசரி( ஒரு நாள் விட்டு ஒரு நாள்)
இப்படி நகராட்சி நிர்வாக ஆணையரகத்திற்கு நகராட்சிகளின் ஆணையர்கள் குடி நீர் பஞ்சம் என்றால், தம்மை மாற்றிவிடுவார்களோ என்று தவறான புள்ளி விவரங்களை கொடுத்துள்ளார்கள்..
உண்மையில் குடி நீர் பஞ்சாத்தால், வாக்களித்த மக்கள் பிளாஸ்டிக் காலி குடங்களை வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் குடி நீர் லாரி வருமா என்று பல மணி நேரம் காத்துக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது, நெஞ்சம் பதறுகிறது.
தொடரும்…..