அதிமுக அரசின் முட்டை ஊழல் – சிக்கிய குமாரசாமி….

மக்கள்செய்திமையம்.காமில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுக அரசின் சத்துணவு முட்டையில் ஊழல் என்று செய்தி வெளியானது. 5.7.18ம் தேதி காலை முதல் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்யும் கிறிஷ்டி புட்ஸ் குமாரசாமியின் வீடுகள், அலுவலகங்கள் உள்பட 75 இடங்களில் 500க்கு மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

 மத்திய பிரதேசம் இந்தூரில் தலைமறைவாக இருந்த குமாரசாமியை வருமான வரித்துறையின் அமுலாக்கப்பிரிவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தது.. கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி, 2012ம் ஆண்டு கர்நாடகாவில் அங்கன்வாடி மையங்களுக்கு தரமில்லாத சத்துமாவு சப்ளை செய்ததாக லோக் ஆயுதாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 31.5.12ல் குமாரசாமியின் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

 மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு லெட்டர் பேடு நிறுவனங்கள் மூலம் சத்துமாவு, முட்டை சப்ளை செய்ததில் வரி ஏய்ப்பு நடந்துள்ளது.

 கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி பெயரில் 100க்கு மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகிறது. பல நிறுவனங்கள் லெட்டர் பேடு நிறுவனங்களாக உள்ளது.  நமக்கு கிடைத்த பட்டியல்..

  CHRISTY FRIEDGRAM INDUSTRY PRIVATE LIMITED
CHRISTY QUALITY FOODS (INDIA) PRIVATE LIMITED
FAIR DEAL FOOD VENTURES PRIVATE LIMITED
CHRISTY HEALTH FOODS PRIVATE LIMITED
EVER GREEN FABRIC PROCESS PRIVATE LIMITED
CHRISTY TEXTILE PRODUCTS PRIVATE LIMITED
CHRISTY AGRO TECH PRIVATE LIMITED
VAGAS AQUA PRIVATE LIMITED
AMRISH HOMES PRIVATE LIMITED
HANDHOLD VENTURES PRIVATE LIMITED
RIGHT TIME COMMERCIALS PRIVATE LIMITED
TOORQ MEDIA SERVICES PRIVATE LIMITED
ARUM HUMUS TECHNOLOGY PRIVATE LIMITED
DEAR PLAZA PRIVATE LIMITED
EASTERN GHATS MEGA FOOD PARK PRIVATE LIMITED
LITERACY FRAMEWORK PRIVATE LIMITED

 தமிழக அரசு சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு முட்டையில் தினமும் ரூ84 இலட்சம் கமிசனாக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கொடுக்கப்படுவதாகவும், கிறிஷ்டி புட்ஸ் குமாரசாமி மீது, மக்கள்செய்திமையம் விஜிலென்ஸ் இயக்குநரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது..

  குமாரசாமி காப்பாற்றப்படுவாரா…நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பார்ப்போம்…

 

Comments

comments