அதிமுக அரசின்- சத்துணவு முட்டை ஊழல்

திமுக ஆட்சியில்(1996-2001) ஊட்டச்சத்து மையங்களுக்கு சத்துமாவு சப்ளை செய்து வரும் கிருஷ்டி புட்ஸ் குமாரசாமிதான் பினாமி பெயர்களில் சத்துணவுக்கு முட்டை சப்ளை செய்கிறார்.

    2013-14ம் ஆண்டிற்கான முட்டை டெண்டரில் கிருஷ்டி புட்ஸ் குமாரசாமி, நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கோயம்புத்தூர் இரண்டு பினாமி நிறுவனங்களில் பெயரில் கலந்து கொள்கிறார். இந்த இரு நிறுவன்ங்களும் முட்டை கொள்முதல் டெண்டரில் தேர்வு செய்யப்பட்டது. 9 பைசா போக்குவரத்து செலவினம் உட்பட ஒரு முட்டை விலை ரூ3.19 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    2014-15ம் ஆண்டிற்கு கிருஷ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனங்கள் நாச்சுரல் புட் புராடக்ஸ் நாமக்கல், சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கோயம்புத்தூர் இரு நிறுவனங்களுடம் முட்டை கொள்முதல் டெண்டரில் தேர்வு செய்யப்பட்டது. 15 பைசா போக்குவரத்து செலவு உட்பட ஒரு முட்டையின் விலை ரூ4.51. ஆனால் 2014 ஜனவரி முதல் 2015 ஜூன் 12ம் தேதி இன்று வரை குக்கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் ஒரு முட்டை ரூ3.75க்கு கிடைக்கிறது. மொத்த விற்பனையில் அதிக பட்ச ஒரு முட்டை விலை ரூ3.30தான்.

   இப்படி சில்லறை விலையில் ஒரு முட்டை ரூ3.75க்கு கிடைக்கும் போது, சத்துணவு மையங்களுக்கு ஒரு நாளைக்கு 69 லட்சம் முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. டெண்டரில் என்ற பெயரில் நடக்கும் மெகா முறைகேட்டில் ஒரு முட்டை ரூ4.51க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் ஊழல், முறைகேடு நடந்துள்ளது. சராசரி ஒரு முட்டைக்கு ரூ1 வரை கமிசனாக அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை செல்கிறது. ஒரு நாளைக்கு சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மையங்களுக்கு தேவையான முட்டை சுமார் 69லட்சம்..அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை முட்டை கமிசன் ஒரு நாளைக்கு ரூ69இலட்சம்..

2015-16 ஆம் ஆண்டிலும் இதே நிலைதான். 2016-17ல் வெளிமார்க்கெட்டில் சில்லறை விலையில்  ஒரு முட்டை ரூ3.60க்கு கிடைக்கும் போது, சத்துணவு மையங்களுக்கு தினமும் 69 இலட்சம் முட்டை சப்ளை செய்ய, ஒரு முட்டைவிலை ரூ4.35 என டெண்டரில் நிர்ணயம் செய்தார்கள். முட்டையிலும் தினமும் ரூ69 இலட்சம் கமிசன்…

  கிறிஸ்டி புட் குமாரசாமியின் பினாமி நிறுவனமான நாச்சுரல் புட் புராடக்ஸ் கம்பெனி இந்தியன் வங்கி திருச்செங்கோடு கிளையில் வங்கி கியாரண்டி ரூ6கோடிக்கு(No.00203IG140000005 DATED 20.5.14) கொடுத்துள்ளது.

  சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கம்பெனி இந்தியன் வங்கி திருசெங்கோடு கிளையில் வங்கி கியாராண்டி ரூ3கோடிக்கு(No.00203IG140000004 DATED 20.5.14) கொடுத்துள்ளது.

    வங்கி கியாராண்டியை பார்க்கும் போது, இரண்டு நிறுவனமும் திருச்செங்கோட்டிலிருந்து செயல்படுகிறது என்ற உண்மை வெளிவந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து செயல்படுவதாக சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் கூறி டெண்டரில் கலந்து கொண்டது. ஆனால் வங்கி கியாராண்டி திருசெங்கோடு இந்தியன் வங்கி கிளையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.இரண்டு நிறுவனங்களின்  ரூ100/-மதிப்பிலான பத்திரம் 28.5.14ம் தேதி இந்திரா நகரில் உள்ள குமரவேலுவிடம் வாங்கப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களின் பினாமி உரிமையாளர் கிருஷ்டி புட்ஸ் குமாரசாமி என்பது உறுதியாகிறது.

    கிருஷ்டி புட்ஸ் குமாரசாமியின் பினாமி நிறுவனமான நாச்சுரல் புட் புராட்க்ஸ்,  சுவர்ணபூமி எண்டர்பிரைசஸ் இரண்டு நிறுவனங்கள்தான் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்கிறது…வழக்கம் போல், முட்டை சில்லறை விலையை விட அதிகவிலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது தினமும் ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் வரை கமிசனாக கொடுக்கப்படுகிறது.

 இந்த மெகா முட்டை ஊழல் தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ல் தகவல் தர மறுக்கப்படுகிறது..

  நம்மிடம் உள்ள ஆதாரங்களை வைத்து, இயக்குநர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திற்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது..

 

Comments

comments