அதிமுகவின் ஊழல்களை மக்களிடம்.. எதிர்கட்சியாக செயல்படும் மக்கள்செய்திமையம்…

அதிமுக அரசின் ஊழல்களை புத்தகவடிவில், நான்கு பக்கம், எட்டு பக்கம் மினி புத்தகமாக 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் பணியை மக்கள்செய்திமையம் செய்து வருகிறது..

 அதே போல் பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் நில ஆக்ரமிப்பு மாபியா பச்சமுத்துவின் நில ஆக்ரமிப்பை 4பக்கம் கொண்ட 20,000 மினி புத்தகம்  ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் கொடுக்கப்பட்டுவிட்டது.

 ஜெயலலிதாவை ஏமாற்றிய ஊழல் சக்ரவர்த்தி ஒ.பன்னீர்செல்வம் , 12 பக்கங்கள் கொண்ட மினி புத்தகம் தேனி தொகுதி முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது…

அதிமுக வேட்பாளர்  கே.பி.முனுசாமியின் ஊழல்கள் 8பக்கம் கொண்ட 20,000 மினி புத்தகம் கிருஷ்ணகிரி தொகுதி முழுவதும் கொடுக்கப்பட்டு வருகிறது..

 அதிமுக அரசின் முட்டை ஊழல், இலவச மின்சாரத்தில் ரூ15,000கோடி ஊழல், அதிமுக அரசின் ஒரு இலட்சம் கோடி ஊழல், தமிழக அரசின் ரூ50,000கோடி ஊழல் உள்ளிட்ட பல ஊழல் புத்தகங்கள் மக்கள்செய்திமையம், மக்களிடம் கொண்டு போய் சேர்த்து உள்ளது..

 தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக களம் இறங்கியுள்ள திமுக கூட்டணி அதிமுக அரசின் ஊழல்களை மக்களிடம் பேசவே இல்லை.. ஆனால் மக்கள்செய்திமையம், அதிமுக அரசின் ஊழல்களை கொண்டு சென்று எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

Comments

comments