அண்ணா பல்கலைக்கழகம் -பாஸ் போடும் உமா அக்கா…ஊழல் சாம்ராஜ்ஜியம்..

உலக பிரபலமான அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக உமா பொறுப்பில் உட்கார்ந்தது முதல் மறு மதிப்பீடு என்ற பெயரில் ஊழல் சாம்ராஜ்ஜியத்தை நடத்தியுள்ளார்..

 2015ம் ஆண்டிலிருந்து விடைத்தாள் மறு மதிப்பீடு என்ற பெயரில் வியாபாரமே நடந்தது.

 2017ல் செமஸ்டர் தேர்வின் விடைத் தாள் மறு மதிப்பீடு திண்டிவனத்தில் உள்ள பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடந்தது. அந்த கல்லூரியின் தீன் பி.விஜயகுமார் உமா அக்கா கூட்டணியின் முக்கிய பொறுப்பாளர்..3,02,380 மாணவர்கள் மறு மதிப்பீட்டுக்கும் விண்ணப்பத்திருந்தார்கள். இதில் 73,333 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதோடு, 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றார்கள்..

 73,333 பேரும் தலா ரூ10,000 முதல் ரூ30,000 வரை உமா அக்கா கூட்டணிக்கு இலஞ்சம் கொடுத்துள்ளார்கள்..  சின்ன கணக்கு போட்டு பாருங்கள்..நாம் ரூ10,000 இலஞ்சம் கொடுத்ததாக கணக்கு போடலாம்.. 73,333 X ரூ10,000 = ரூ73.33கோடி… அம்மாடியோவ்…இது 2017ல் மட்டும்..2015,2016ல் தெரியவில்லை…

  மறு மதிப்பீடு முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் வழக்கு(09/31.7.18) பதிவு செய்துள்ளது.    

  உமா அக்கா கூட்டணியில்  …ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நிர்வாகிகள்..

  1. விஜயகுமார் – university college tindivanam
  2. சிவக்குமார் – university college tindivanam
  3. சுந்தர்ராஜன் – NPR  college
  4. மகேஷ்பாபு -SKP college  tiruvannamalai
  5. அன்புசெல்வன்- SKP college tiruvannamalai
  6. திருமதி பிரதீபா – Examiner
  7. பிரகதீஸ்வரர் – A.C college Chennai
  8. ராமகிருஷ்ணன் – salem college
  9. ரமேஷ்  – Examiner      

 அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமா அக்கா மூன்று வருடத்திற்கு முன்பு கோட்டூரில் வாடகை வீட்டில் குடியிருந்தது. ஆனால் இப்ப  உமா அக்காவுக்கு கோட்டூர் கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் A பிளாக் இரண்டாவது மாடியில் இரண்டு வீடுகள் உள்ளிட்ட மூன்று வீடுகள் வாங்கியுள்ளார்.. B – பிளாக் தரைத்தளத்தில் மூன்று படுக்கை அறைவீட்டில்  உமா அக்கா குடியிருக்கிறார்கள்…

 இன்னும் உமா அக்காவின் முழு சொத்துப்பட்டியல் தெரியவில்லை. மற்ற ஒன்பது பேரின் சொத்து பட்டியலை கேட்டவுடம் மயக்கமே வந்துவிட்டது…

  மன்னிக்கவும்…விஜிலென்ஸ் விசாரணை நடப்பதால் சில விவரங்களை வெளியிட முடியவில்லை.

 

Comments

comments