அண்ணா பல்கலைக்கழகம்…துணை வேந்தர் யார்…S.கணேசன் VS M.K.Surappa

 

அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியாளர் முடித்தவுடன் கொடுக்கப்படும் பட்டம் /சான்றிதழில் வெளிநாடுகளில் வேலைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கேவலமான நிலை ஏற்பட்டப்பிறகு, துணை வேந்தர் சில நாட்களில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.

 துணை வேந்தர்  பதவிக்கு வந்த 170 விண்ணப்பங்களில், பல கட்ட ஆய்வுக்கு பின்பு தேவராஜ், எம்.கே சுரப்பா, காளியப்பன், எஸ்.கணேசன், காளிராஜ், எஸ்.பொன்னுசாமி, வி.ராஜேந்திரன், ஆர்.ரமேஷ்  ஆகியோருக்கு நேரடித் தேர்வு சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடந்தது.

 பல முறைகேடுகளில் சிக்கி, விஜிலென்ஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முன் ஜாமீனுக்கு அலைந்துக்கொண்டு இருக்கும் முன்னாள் துணை வேந்தர் எம்.ராஜாராம் துணை வேந்தராக இருந்த போது, பதிவாளராக இருந்து, ராஜாராமுடன் பல ஊழல்களில் கூட்டணி அமைத்த, இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் இணைந்துள்ள தற்போது பதிவாளராக தொடரும்  எஸ்.கணேசனுக்கு, உயர்க்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ், சிபாரிசு செய்துள்ளார்.  பண பரிமாற்றம் நடந்த காரணத்தால் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ், ஆளுநரிடம் முதல்வருக்கு நெருக்கமானவர், அதிமுக அரசு எஸ்.கணேசனை விரும்புகிறது என்று  கூறியுள்ளார். உண்மையில் பதிவாளர் கணேசனுக்கு துணை வேந்தருக்கான தகுதி இல்லை. கணேசன் பொறியியல் பட்டதாரி இல்லை. எம்.எஸ்.சி மெடிக்கல் பிசிக்ஸ், பிஎச்.டி லேசர் மெடிசன்…ராசாராம் துணை வேந்தராக இருக்கும் போது, ஊழலில் சம்பாதித்த பணத்தை வைத்து, துணை வேந்தர் பதவியை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார்..

 ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  பெங்களூர் ஐ.ஐ.டியில் பணியாற்றும் எம்.கே. சுரப்பாவை  நியமிக்கலாம் என்று ஆலோசனை செய்து வருகிறார்…

 சுரப்பாவைவிட  தகுதி, அனுபவம் வாய்ந்த பலர், நேரடித் தேர்வில் கலந்து கொண்டாலும் துணை வேந்தர் பதவிக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்…

 பண பரிமாற்றம் பதிவாளர் எஸ்.கணேசனா….ஆளுநரின் விசுவாசி எம்.கே சுரப்பாவா…

       ஒரிரு நாட்களில் ….பார்ப்போம்…என்ன நடக்கிறது…

 

Comments

comments