அண்ணா பல்கலைக்கழகம் – உமா வாக்குமூலத்தில்- சிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்..  

அண்ணா பல்கலைக் கழகத்தில் தேர்வு கட்டுப்பாடு அதிகாரியாக திருமதி உமா பொறுப்பேற்றது முதல்  அதாவது    2015,2016,2017 ஆகிய ஆண்டுகளில் மட்டும் 3இலட்சம் மாணவர்களின்  விடைத்தாள் மறு மதிப்பீடு என்ற பெயரில்  பாஸ் போட வசூல் செய்யப்பட்ட தொகை ரூ300கோடி….அண்ணா பல்கலை கழகத்தில் உமா ஊழல் ராணியாக வலம் வந்துள்ளார்..ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், அமைச்சர்களை இலஞ்சம் வாங்கி பணத்தால், விலைக்கு வாங்கியதால் ஆளுநர் மாளிகை மற்றும் உயர்கல்வித்துறையில் அதிகாரமையத்தில் வலம் வந்துள்ளார்..

 தேர்வு கட்டுப்பாடு அதிகாரி உமா, திண்டிவனத்தில் உள்ள  university college of engineering தீன் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் மூவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்..

  உதவி பேரராசிரியர் சிவக்குமார்..

 உமா நான் வசூல் செய்து, துணை வேந்தராக இருந்த ராஜாராமன், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் ஐ.ஏ.எஸ்க்கும் பங்கு கொடுத்துள்ளேன். ஆளுநரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா ஐ.ஏ.எஸ் எனக்கு பாதுகாப்பாக இருந்தார். மேலும் ஹேமந்தகுமார் சின்கா ஐ.ஏ.எஸ், கார்த்திக் ஐ.ஏ.எஸ்  மற்றும் தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மூவரும் எனக்கு மிகவும் உதவி செய்துள்ளார்கள்..மூவருக்கும் மறு மதிப்பீட்டில் வசூலில் பங்கு கொடுத்து உள்ளேன் என்று விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்..

ஆளுநர் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த்மீனா ஐ.ஏ.எஸ் மற்றும் பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பெயரை வாக்குமூலத்தில் கூறியுள்ள காரணத்தால், விஜிலென்ஸ் அதிகாரிகள் உமாவை கைது செய்வதில் தயக்கம் காட்டி வருகிறார்கள்..

தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர்ராவ் இருக்கும் போது, உமா மீது பல புகார்கள் ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்டது. ஆளுநரின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா உமாவை காப்பாற்றினார்..விஜிலென்ஸ் அதிகாரிகளும் உமாவுக்கு சாதகமாக செயல்பட்டார்கள்.. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சூரப்பா பொறுப்ப்பேற்றதும். உமா மறு மதீப்பீடு ஊழல் தொடர்பான பல ஆதாரங்களை கொடுத்தவுடன் அதிர்ச்சியானார்.. அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்…

2012 ஆண்டு முதல் மறு மதிப்பீடு ஊழல்களை விசாரிக்க தொடங்கி உள்ளார். இலட்சக்கணக்கான மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் சிக்குவார்கள்..

உமா கைது செய்யப்பட்டால் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவரும்…

Comments

comments